கங்குவா படம் எப்படி இருக்கு! படம் பார்த்து நெட்டிசன்கள் சொன்ன விமர்சனம்!

சூர்யா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

kanguva review

சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய அளவில் அதிகம் வசூல் செய்யும் என படக்குழு கூறிய காரணத்தாலும், படத்தின் டிரைலரும் வெளியாகி அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.

தமிழகத்தில் அதிகாலை சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 9 மணிக்கு தான் முதல் நாள் முதல் காட்சி தொடங்கியது. ஆனால், கேரளா மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை வெளியானது. படத்தினை பார்த்த மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் எக்ஸ் வலைத்தள (ட்வீட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” கங்குவா ஒரு ஃபேண்டஸி ஆக்‌ஷன் படமாகும், இது நல்ல சாத்தியமுள்ள கதையைக் கொண்டிருந்தது, ஆனால், இயக்கம் கொஞ்சம் சரியில்லை. சூர்யா தனது பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார், அவருடைய முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை, ஆனால் இது போன்ற ஸ்கிரிப்டை வெறும் நடிப்பால் காப்பாற்றுவது கடினம்.

இது போன்ற படத்திற்கு தேவையான எமோஷனல் கனெக்டிவிட்டி முற்றிலும் இந்த படத்தில் இல்லை. இயக்குநர் சிவா முதல் பாதியில் ஓரளவு திரைக்கதையை ஒன்றாக இணைத்துள்ளார், ஆனால் இரண்டாவது பாதியில் அதை செய்யவில்லை. இது ஒரு கட்டத்திற்கு மேல் படத்தை பார்க்க முடியவில்லை.  BGM சில இடங்களில் வேலை செய்கிறது, ஆனால் மிகவும் சத்தமாக உள்ளது” என படம் சுமாராக இருப்பதாக தெரிவித்தார்.

மற்றொருவர் ” கங்குவா படம் மிரட்டலாக இருக்கிறது. படத்தின் VFX காட்சிகள் அருமையாக உள்ளது. படத்தில் சூர்யாவின் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம். அதைப்போல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை அருமையாக இருக்கிறது. படத்தில் வரும் முதலை சண்டைக்காட்சிகள் அருமையாக உள்ளது. உணர்ச்சியுடன் கூடிய பக்கா என்டர்டெய்னர்” என கூறியுள்ளார்.

மற்றொருவர் ” கங்குவா படத்தில் சில காட்சிகள் பிரமாண்டமாக இருக்கிறது. இது வரலாற்று மற்றும் சமகால கூறுகளை தடையின்றி இணைக்கிறது. சூர்யா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்து இருக்கிறார். . பல ஆச்சரியங்களும் உண்டு. டிஎஸ்பி இசையையும் பிஜிஎம்மையும் படத்திற்கு முதுகெலும்பு” என கூறியுள்ளார்.

மற்றொருவர் ” சூர்யாவின் பிரமாண்ட கால-ஆக்‌ஷன் ஃபேன்டசியில் வலுவான காட்சிகள் உள்ளன, ஆனால் எமோஷனலாக இருக்கும் காட்சி எடுபடவில்லை. அதிக எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், படத்தை சரியாக எடுக்கவில்லை” என கூறியுள்ளார்.

மற்றொருவர்”கங்குவா படம் பெரும் ஏமாற்றம். சிவா படத்தின் திரைக்கதையில் திணறியுள்ளார். வரலாற்று காலகட்டப் பகுதிகளில் உணர்ச்சிகரமான இணைப்பு இல்லை. சூர்யாவின் நடிப்பு, சில சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் ஆகியவை மட்டுமே படத்தை காப்பாற்றும்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
TN Police - ENCOUNTER
Kohli Angry On Khaleel
earthquake - helpline
C Voters survey -MK Stalin TVK Vijay EPS Annamalai
Hardik Pandya
TVK Leader Vijay - Edappadi palanisamy