“பொருள் அந்த மாதிரி வர்மா”! புஷ்பா 2 எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!

புஷ்பா 2 படம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் படமாக அமையும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தணிக்கைக் குழு உறுப்பினர் உமைர் சந்து தெரிவித்துள்ளார்.

pushpa 2 review

சென்னை : புஷ்பா 1 படம் எப்படி இருந்தது என்று நாம் அனைவரும் தெரியும். ஆனால், இரண்டாவது பாகமும் அதே அளவுக்கு கமர்ஷியல் ரீதியாக இருக்குமா? முதல் பாகம் நம்மளை கவர்ந்த அளவுக்கு கவருமா? என்று படத்தை பார்க்க மக்கள் அனைவரும் டிக்கெட்டை புக்கிங் செய்துகொண்டு காத்துள்ளனர். படம் டிக்கெட் புக்கிங்கிலியே பெரிய சாதனையையும் படைத்திருக்கிறது.

குறிப்பாக வெளியாவதற்கு உலகம் முழுவதும் டிக்கெட் புக்கிங்கில் மட்டுமே இதுவரை 100 கோடி வசூல் செய்துள்ளது. எனவே, கண்டிப்பாக வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. ஒரு பக்கம் வசூல் ரீதியாக எதிர்பார்ப்பு இருக்கும் வகையில், மற்றோரு பக்கம் படம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

இந்த சூழலில், படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை இன்னுமே அதிகப்படுத்தும் வகையில், இப்படத்தைப் பார்த்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தணிக்கைக் குழு உறுப்பினர் உமைர் சந்து தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார். படம் பார்த்துவிட்டு அவர் கூறியதாவது ” புஷ்பா 2 திரைப்படம் கண்டிபாக மீண்டும் மீண்டும் பார்க்க கூடிய ஒரு படமாக இருக்கும்.

படத்தில் அல்லு அர்ஜுன் பேசும் வசனங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. அதைப்போல, படத்தில் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியாக நடித்துள்ளார். அவருக்கும் அல்லு அர்ஜூனுக்கும் கெமிஸ்ட்ரி சிறப்பாக உள்ளது. கண்டிப்பாக இந்த படத்தினை மக்கள் விரும்புவார்கள். படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக மாறும்” என எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது விமர்சனத்தை தெரிவித்திருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்