மாநகரம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன் தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் “மைக்கேல்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, வருண் சந்தேஷ், வரலட்சுமி சரத்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், படம் பார்த்த நெட்டிசன்கள் ட்வீட்டரில் கூறியுள்ள விமர்சனத்தை பார்க்கலாம். படத்தை பார்த்த ஒருவர் ” மைக்கேல் திரைப்படம் பார்க்கலாம். முதல் பாதி அருமை இரண்டாவது பாதி ஏமாற்றம். மற்றபடி படத்தில் நடித்த சந்தீப் கிஷன், கெளதம் மேனன், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பு வேற லெவல்..சாம்.சி.எஸ் இசை சூப்பர்” என பதிவிட்டுள்ளார்.
மற்றோருவர் ” மைக்கேல் ஒரு சில தருணங்களில் தடுமாறும் ஒரு சப்பார் கேங்ஸ்டர் நாடகம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வலுவானது மற்றும் நிறைய சாத்தியம் இருந்தது, ஆனால் காட்சிகள் எந்த தாக்கமும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளன. திரைப்படம் நன்றாகத் தொடங்குகிறது, ஆனால் விரைவாக மிகவும் தட்டையாகவும் வழக்கமானதாகவும் மாறும்” என பதிவிட்டு 5-2 ரேட்டிங் கொடுத்துள்ளார்.
மற்றோருவர் படத்தின் காட்சிகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது என்றும், சந்தீப் கிஷன், கெளதம் மேனன், விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பு வேற லெவல்..சாம்.சி.எஸ் இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. 5-3″ என ரேட்டிங் கொடுத்துள்ளார்.
விமர்சனத்தை வைத்து பார்க்கையில், படம் நன்றாக தான் இருக்கிறது என தெரிகிறது. எனவே படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம். படத்திற்கு நல்ல விமர்சனம் வருவதால் கண்டிப்பாக வசூலில் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என தெரிகிறது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…