மாமன்னன் படம் எப்படி இருக்கு..? படம் பார்த்துவிட்டு வெற்றிமாறன் கூறிய விமர்சனம் இதோ…

vetrimaaran about maamannan

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர்  நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், உதயநிதி ஸ்டாலின்ப கேரியரில் சிறந்த படம் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். ரசிகர்களை போலவே, சினிமா பிரபலங்கள் பலரும் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், படத்தை பார்த்த இயக்குனர் வெற்றிமாறன் ” மாமன்னன் திரைப்படம் ரொம்ப அருமையாக இருக்கிறது. இந்திய திரையுலகில் இதுவரை எடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஒரு அரசியல் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த படம் இந்திய அரசியலின் உண்மையான சாரத்தை திறமையாகப் படம்பிடித்து, ஜாதி இயக்கவியலுடன் நுணுக்கமாக பின்னப்பட்டிருக்கிறது.

படத்தில் வடிவேலு, பஹத்பாசில் அருமையாக நடித்துள்ளார்கள். அவர்களுடைய நடிப்பு ரொம்ப நன்றாக இருந்தது. படம் அருமையாக இருக்கிறது கண்டிப்பாக இந்த படத்தை அனைவரும் பார்க்கவேண்டும்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்