suriya Tamannaah [File Image]
சூர்யாவின் 43-வது திரைப்படத்தை இறுதிசுற்று, சூரரைப்போற்று உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா தான் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான 2 டி நிறுவனம் தான் தயாரிக்கிறது.இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிற்கு இது தான் 100-வது படம்.
இந்த 43-வது திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான், நடிகை நஸ்ரியா, நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது.இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர் விஜய் வர்மா வேறு யாரும் இல்லை நடிகை தமன்னாவின் காதலர் தான்.
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்தும் நடிகை சுதா கொங்கரா விஜய் வர்மாவை இந்த திரைப்படத்தில் நடிக்க தேர்வு செய்ய இரண்டு காரணங்கள் இருக்கிறதாம். ஒன்று தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் இணைந்து நடித்திருந்த “லஸ்ட் ஸ்டோரி 2” வை சுதாகொங்கரா பார்த்தாராம். அதை பார்த்துவிட்டு அவர் சூர்யாவின் 43 படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்பதால் தேர்வு செய்து இருக்கிறாராம்.
தீபாவளிக்கு எத்தனை படம் வெளியானாலும் பரவாயில்லை! ‘ஜப்பான்’ குறித்து பேசிய தயாரிப்பாளர்!
மற்றோரு காரணம் என்னவென்றால், நடிகை தமன்னாவே சூர்யா மற்றும் சுதா கொங்கரா ஆகியோரிடம் தன்னுடைய காதலர் விஜய் வர்மாவுக்கு ஒரு நல்ல பெயர் வேண்டும் என்று அந்த படத்தில் தன்னுடைய காதலருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுங்கள் என்று பேசி வாய்ப்பு வாங்கியும் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எது எப்படியோ சூர்யா 43 திரைப்படம் கண்டிப்பாக வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், புறநானூறு என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது ஆனால் , முழுப்பெயரை வெளியிடாமல் புறநானூறு என்று மட்டும் தான் வைத்து நேற்று அறிவிப்பு வீடியோ வெளியானது. இதனை வைத்து பார்த்தால் படம் கண்டிப்பாக எதோ சொல்ல வருகிறது என தெரிகிறது. விரைவில் படத்தின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…
சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…