கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இதில் கடந்த பிக் பாஸ் 6-வது சீசன் தமிழ் நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் பங்கேற்றிருந்த நிலையில், அசீம் டைட்டிலை தட்டி சென்றார்.
அசீம் வெற்றியடைந்ததையடுத்து பலரும் அவர் எப்படி வெற்றிபெறலாம்..? இது மிகவும் தவறு என்பது போல விமர்சனங்களை இன்று வரை கூறி வருகிறார்கள். இந்த நிலையில், பிரபல யூட்டியூப்பர் ஜோ மைக்கேல் என்பவர் தற்போது பிக் பாஸ் மற்றும் அசீமுக்கு எதிராக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மனுவில் ” பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் வழக்கு உள்ளதா..? எனவும், பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப பிசிசிசி (பிராண்ட் காஸ்ட் கண்டன்ட் கம்பளைண்ட் கவுன்சிலிங்) சான்றிதழ் வாங்கியுள்ளதா? வார இறுதியில் எதை வைத்து அடிப்படையில் எலிமினேஷன் நடந்தது? சீசன் 6 வெற்றியாளர் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.?
எந்த அடிப்படையில் விக்ரமன் ரன்னராக அறிவிக்கப்பட்டார்? விக்ரமனுக்கும், அசீமிற்கும் இடையில், எத்தனை வாக்குகள் வித்தியாசம் உள்ளது ..? அசீம் பெற்ற வாக்குகள் எத்தனை?. உண்மையிலே பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமுறைகள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? ” என 11 கேள்விகளை ஜோ மைக்கேல் எழுப்பியுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…