அரைவேக்காட்டு தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் அளிக்க முடியும்! நடிகர் சூர்யாவை விளாசிய அமைச்சர் கடம்பூர் ராஜு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சில சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா கல்வி கொள்கை குறித்து பேசியுள்ளார். இவரது கருத்துக்கு பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தாலும், சிலர் இதற்க்கு எதிர்ப்பாக தான் பேசி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து கடம்பூர் ராஜு அவர்கள் கூறுகையில், “கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும்? நன்கு தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். அரைவேக்காட்டு தனமாக பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும்.” என கூறியுள்ளார்.