விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை பார்க்க ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு காரணமே படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் ஆகியோர் பேட்டிகள் கொடுக்கும் போது லியோ படத்தை பற்றி பேசியது தான்.
குறிப்பாக ரத்னகுமார் விஜயின் 67 படங்களில் டாப் மூன்று படங்களில் லியோ திரைப்படம் கண்டிப்பாக இருக்கும். படத்தின் டைட்டில் கார்ட் பார்க்கும் போதே அனைவரும் ஆச்சரியமாவீர்கள் என கூறியிருந்தார். எனவே, இதன் மூலம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு படத்தின் இசையமைப்பாளரான அனிருத் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தன்னுடைய விமர்சனத்தை கூறியுள்ளார்.
எப்போதும் படத்திற்கு பின்னனி இசை அமைத்துவிட்டு படம் பார்க்கும்போது அந்த படம் ஹிட் ஆகும் என்றால் அதற்கான விமர்சனத்தை எமோஜிகல் மூலம் அனிருத் வெளியிடுவார். அப்படி ஜவான், விக்ரம், ஜெயிலர் ஆகிய படங்களை பார்த்துவிட்டு எக்ஸ் வலைதள பக்கத்தில் தன்னுடைய விமர்சனத்தை பதிவிட்டு இருந்தார்.
அவர் விமர்சனங்கள் கூறிய இந்த அணைத்து படங்களுமே வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த நிலையில், இந்த திரைப்படங்களை தொடர்ந்து லியோ படம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என்பது போலவும் படம் சூப்பராக இருக்கும் எனவும் தன்னுடைய எமோஜி மூலம் அனிருத் கூறியுள்ளார். எனவே, அனிருத்தே படத்தை பற்றி இப்படிகூறியுள்ளார் படம் கண்டிப்பாக வெற்றியடையும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…