தனுஷிற்கு அடுத்த ஹிட் ரெடி…”வாத்தி” திரைப்படம் எப்படி இருக்கு..? விமர்சனம் இதோ..!
நடிகர் தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்தில் முடித்துள்ளார். தமிழில் வாத்தி என்ற பெயரிலும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. படத்தில் சம்யுக்த்தா,தனிகெள பரணி, சாய் குமார், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், ஷா ரா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வாத்தி படத்தினை ப்ரிமீயர் ஷோவில் பார்த்த பத்திரிகையாளர்கள் டிவிட்டரில் கூறியுள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.
A very emotional and gripping film. Advanced congratulations to @Dhanushkraja #VenkyAtluri @vamsi84 and @SitharaEnts
— Navin Nooli (@NavinNooli) February 13, 2023
படத்தை பார்த்த ஒருவர் ட்வீட்டர் பக்கத்தில் ” வாத்தி திரைப்படம் மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் அழுத்தமான படம். படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்” என படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
#Vaathi #Sir – An emotional tale expertly presented by the duo of @dhanushkraja and #VenkyAtluri. Quite a few lump in the throat moments throughout the film. Excellent score by @gvprakash.
— …. (@ynakg2) February 13, 2023
அவரை போல மற்றோருவர் ” வாத்தி திரைப்படம் திறமையாக முன்வைத்த உணர்வுபூர்வமான கதை. வெங்கி அட்லூரி படத்தை நன்றாக இயக்கி இருக்கிறார். தனுஷ் அருமையாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷின் இசை அருமை” என பதிவிட்டுள்ளார். எனவே விமர்சனத்தை வைத்து பார்க்கையில் படம் கண்டிப்பாக பெரிய ஹிட் ஆகும் என தெரிகிறது.