Categories: சினிமா

டீ-க்காக வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹவுஸ்மேட்ஸ்.. ஆரம்பித்தது “பிக்பாஸ்” தகராறு.! ஷாக்கிங் ப்ரோமோ இதோ..

Published by
பால முருகன்

பிக் பாஸ் 6 -வது சீசன் கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கி இரண்டாவது நாளாக விறு விறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் பெரிதாக போட்டிகள் கடினமானதாக இல்லாமல் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

BiggBossTamil Day2 Promo2

இதனையடுத்து, இன்று வெளியான இரண்டாவது நாளுக்கான 2-வது ப்ரோமோவில் பிக்பாஸ் வீடு ரணகளமாக காணப்படுகிறது. ஏனெனில் டீ காபி குடிப்பதற்கு கூட சண்டைபோட்டு கொள்கிறார்கள். ப்ரோமோவில் கிச்சன் டீமின் தலைவர் ஷிவின், ஹவுஸ் மேட்களுக்கு கடிந்துக் கொண்டே இரண்டு வேலை தான் டி கிடைக்கும் என்று விளக்கம் கொடுக்கிறார்.

இதையும் படியுங்களேன்- அஜித் என்னோட புள்ள.. அவன மாதிரி குணம் யாருக்குமே இல்ல..பிரபல நடிகர் புகழாரம்.!

பிறகு  அஸீமும், மகேஷ்வரியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அஸீம் சற்று கடுப்பாகி நீங்கள் என்ன பிக் பாஸ் மாதிரி பேசுறீங்க ..? என்று கேள்வி கேட்கிறார். பிறகு மகேஷ்வரியும் பேசிக்கொண்டே போக ஷிவின் ஆத்திரம் அடைந்து கத்துகிறார். அந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இன்று காலையில் வெளியான ப்ரோமோவில் போட்டியாளர்கள் 4 அணிகளாக பிரிக்கப்பட்டு ஒரு காமெடியான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அது என்னவென்றால், கிச்சன் டீமில் உள்ள நபர்கள், ஹவுஸ் மேட்ஸ் கேட்டால் உணவை ஊட்டி விட வேண்டும். அதுபோல், பாத்ரூம் டீமில் உள்ளவர்கள், ஹவுஸ் மேட்ஸுக்கு பாத்ரூம் வந்தால் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்று கழிப்பறை வரை அவர்களை அழைத்து செல்ல வேண்டும்.

இந்த டாஸ்கில் சிறப்பாக செயல்படும் அணி, சிறந்த அணியாக அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான இரண்டு ப்ரோமோக்களில் 1 ப்ரோமோ காமெடியாகவும், மற்றோரு ப்ரோமோ ரணகளமாக இருப்பதால் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியை காண அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

5 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

5 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

7 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

8 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

10 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

11 hours ago