சென்னை : தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் ஹீரோயின் ரேஞ்சுக்கு உடைகள் அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றே சொல்லலாம்.
Anjana Rangan [file image]எனவே, அடிக்கடி புகைப்படங்களை வெளியீட்டு கொண்டு ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அவர் வெளியீட்டு இருந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி இருந்தது.
AnjanaRangan [file image]அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது கருப்பு நிற சேலையில் அட்டகாசமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்து அவர் வெளியீட்டு இருக்கும் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. புகைப்படங்களை பார்த்த பலரும் நீங்க ஹீரோயின் மெட்டீரியல் என்று கூறி வருகிறார்கள்.
AnjanaRangan [file image]மேலும், அஞ்சனா ரங்கன் பொறுத்தவரையில் மிஸ் சின்னத்திரை , பாட்டு புதுசு, நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் கரம், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து தற்போது படங்களின் ப்ரோமொஷன்காக நடக்கும் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.