தலயிடம் உள்ள நேர்மை! தளபதியிடம் இல்லாமல் போனது ஏன்? பிரபல இயக்குனரின் அதிரடி கேள்வி
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே கதைத்திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த தவறுகள் அதிகமாக பிரபலமான நடிகர்கள் படங்களில் தான் நடக்கிறது.
அந்த வகையில், உதவி இயக்குனர் செல்வா அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் தளபதி 63 படத்தின் கதை திருட்டுக்கதை என கூறியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் விஜய், அஜித் என்றெல்லாம் பிரித்து பேச வரவில்லை.
ஆனால், அஜித் சார் பில்லா என்ற படத்தை எடுத்தார், அவர் நினைத்திருந்தால், ரைட்ஸ் வாங்காமல், அப்படியே எடுத்துவிட்டு, வேறு ஒரு டைட்டிலில் ரிலிஸ் செய்திருக்கலாம். ஏனென்றால் அவரிடம் நேர்மை இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், நடிகர் அஜித்திடம் உள்ள நேர்மை ஏன் தளபதி விஜயிடம் இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.