ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பார்க்க போறேன்! ஹாலிவுட் நடிகர் க்ளின்ட் ஈஸ்ட்வுட்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த திரைப்படத்தில் நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, அரவிந்த் ஆகாஷ், பாவா செல்லதுரை உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. படத்தை மக்கள் பலரும் பாராட்டியதோடு சினிமா இயக்குனர்கள் வெற்றிமாறன், ஷங்கர், நெல்சன், லோகேஷ் கனகராஜ், உள்ளிட்ட இயக்குனர்களும் பாராட்டி இருந்தார்கள்.
ஃபைட் கிளப் படத்தை பார்க்க குவிந்த சினிமா பிரபலங்கள்!
அந்த அளவிற்கு அருமையான படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்து இருந்தார். சமீபத்தில் இந்த திரைப்படம் ஓடிடியில் கூட வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான க்ளின்ட் ஈஸ்ட்வுட் குறித்த காட்சிகள் மற்றும் அவருடைய புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கும். எனவே, படத்தில் அவருடைய காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி படத்தை பாருங்கள் என்று ஒருவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் க்ளின்ட் ஈஸ்ட்வுட்டை டேக் செய்து கேட்டுக்கொண்டார்.
எனவே, அந்த பதிவிற்கு க்ளின்ட் ஈஸ்ட்வுட் தரப்பில் இருந்து பதில் வந்து இருக்கிறது. அதில் ” ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் குறித்து க்ளின்ட் ஈஸ்ட்வுட் கேள்விப்பட்டார். அவர் தற்போது ( Juror 2) படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். நடித்து முடித்த பிறகு அந்த திரைப்படத்தை பார்ப்பார்” என கூறப்பட்டுள்ளது. எனவே, விரைவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை க்ளின்ட் ஈஸ்ட்வுட் பார்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025