ஹோலி…ஹோலி…’சந்திரமுகி 2′ படப்பிடிப்பு தளத்தில் கோலாகலமான கொண்டாட்டம்…வைரலாகும் வீடியோ.!
உலகம் முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது. மக்கள் பலரும் தங்களுக்கு பிடித்தவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து ஒருவரை ஒருவர் மாற்றிக்கொண்டு முகத்தில் கலர்களை பூசி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், சினிமா பிரபலங்களும் பலரும் தாங்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளத்தில் ஹோலி கொண்டாடி புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் “சந்திரமுகி 2” படக்குழுவினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார். இவர் தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத் படக்குழுவினருடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவில் கங்கனா ரனாவத் கையில் வண்ண பொடியை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பு தளத்தில் இருப்பவர்களின் கன்னத்தில் பாசமாக பூசுகிறார்.
Kangana Ranaut playing Holi on the sets of Chandramukhi 2 is a delight to watch @KanganaTeam#KanganaRanaut #Chandramukhi2 #Holi2023 pic.twitter.com/HP78wIE8wj
— First India filmy (@firstindiafilmy) March 8, 2023
மேலும், “சந்திரமுகி 2” திரைப்படத்தில் நடிகர் ராகவலாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்து வருகிறார். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.