நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி கடைசியாக அன்பறிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஹிப்ஹாப் ஆதி வீரன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஆர்க் சரவன் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு மரகதநாணயம் படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹிப் ஹாப் ஆதியை வைத்து வீரன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் வினய் ராய், அதிரா ராஜ், முனிஷ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு ஆதியே இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த வீரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், படத்தை பார்த்துவிட்டு டிவிட்டரில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ள விமர்சனத்தை பார்க்கலாம்.
வீரன் டிவிட்டர் விமர்சனம்
இந்த திரைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” வீரன் திரைப்படம் நல்ல ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் ” வீரன் படம் நன்றாக இருக்கிறது. ஹிப் ஹாப் ஆதியின் கதாபாத்திரம் ஜொலிக்கிறது.துணை நடிகர்கள் படத்திற்கு முதுகெலும்பு என்று கூறலாம்.காமெடி காட்சிகள் நன்றாக இருந்தது.பிஜிஎம் & மியூசிக் மிகவும் அருமையாக இருக்கிறது” என கூறி 5/3 என ரேட்டிங் என கொடுத்துள்ளார்.
மற்றோருவர் ” வீரன் திரைப்படம் நல்ல முயற்சியில் எடுத்துள்ளார்கள். நடிப்பில் நிறைய புதிய முகங்கள் படத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் ஹிப்ஹாப் ஆதி வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். நகைச்சுவை காட்சிகள் அருமையாக இருக்கிறது. ‘மரகதநானயம்’ இயக்குனரிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பதும் அது மற்றும் சற்றுஏமாற்றங்கள்” என பதிவிட்டுள்ளார்.
மற்றோருவர் ” படம் வேற லேவல்ல இருக்கு சரியா எல்லாம் அமைஞ்சுருக்கு படத்துல ஆதி வழக்கம் போல சூப்பராக நடித்திருக்கிறார்” என கூறியுள்ளார்.
மற்றோருவர் “மரகதநானயம் டைரக்டர் தரமா எடுத்துருக்காரு அதே மாதிரி விரு விருப்பா நல்ல காமெடி சென்ஸ் படத்தில் இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
மற்றோருவர் ” வீரன் படம் பார்த்தேன் சமீபகாலமாக இதே கருத்தைக் கொண்ட பல படங்கள் வெளிவந்தாலும், இந்தப் படம் கதைக்குள் நின்று தனித்து நிற்கிறது! இயக்குனரின் இன்னொரு நல்ல படம். திரையரங்குகளில் பார்க்க தவறவிட்டு விடாதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
மற்றோருவர் ” வீரன் படம் வேற லெவல் இந்த மாதிரி படம் இன்னும் நிறை படம் வேண்டும். ஆதி அண்ணா நீங்கள் ஜெய்ச்சிட்டீங்க” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…