கேஜிஎப் திரைப்படத்தின் வெற்றி குறித்து சமீபத்தில் பேசிய சுதீப் ” பான் இந்தியா படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டதாக கூறினார்கள் அதில் ஒரு சிறிய திருத்தம் செய்ய நான் விரும்புகிறேன். இந்தி இனி தேசிய மொழி அல்ல” என தெரிவித்திருந்தார்.
சுதீப் பேசியதற்கு நடிகர் அஜய்தேவ்கான் தனது ட்வீட்டர் பக்கத்தில் “உங்கள் கருத்துப்படி இந்தி மொழி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் கன்னட படங்களை டப் செய்து இந்தியில் ஏன் வெளியிடுகிறீர்கள்? இந்தி தான் நமது தேசிய மொழி. ” என இந்தியில் ட்வீட் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்த சுதீப்” இந்தியில் நீங்கள் அனுப்பிய பதிவு எனக்கு புரிந்தது. இந்தி மொழியை நாம் அனைவரும் நேசித்து கற்றுக்கொள்வோம். குற்றமில்லை சார். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா.?” என பதிலளித்துள்ளார்.
அதற்கு அஜய் தேவ் கான் ” நீங்கள் என் நண்பர். நான் தவறாக புரிந்துகொண்டதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி. எப்போதும் நமது துறை ஒன்று என்றே நான் கருதி வருகிறேன். நாம் எல்லா மொழிகளையும் நேசிக்கிறோம். அதே போல எல்லோரும் நமது மொழிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…