ஜப்பான் திரைப்படத்தை வெளியிட தடை – உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Japan - chennai high court

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ஜப்பான்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக சுமார், 1,177 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் சட்டவிரோதமாக படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ட்ரீம் வாரியர் பிட்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்நிலையில், இன்று காலை இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஜப்பான் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் நாளை (நவம்பர் 10 ஆம் தேதி) உலக முழுவதும் வெளியாகிறது.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில், படத்தை சட்ட விரோதமாக 1,177 இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் மட்டும் சுமார், 400 திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கார்த்தி திரையுலக வாழ்க்கையில், மிகப்பெரிய வெளியிடாக அமையும்.

பொங்கல் பண்டிகைக்கு இதுவரை வெளியான தனுஷ் படங்கள்! எல்லாம் ஹிட்டு தான்…

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை ஜப்பான் படம் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்துடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் ரெய்டு திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான்

எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தில் அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்