ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகை பூமிகா கடைசியாக தமிழ் த்ரில்லர் படமான கண்ணை நம்பாதே படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2022 இல், அவர் சித்தந்த் குப்தா மற்றும் வேதிகா பின்டோ நடித்த இந்தி திரைப்படமான ஆபரேஷன் ரோமியோ படத்திலும் நடித்திருந்தார்.
அதைப்போல, தெலுங்கு படங்களான சீதா ராமம் மற்றும் பட்டர்ஃபிளை ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து மீண்டும் பல படங்களில் நடித்து வரும் பூமிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” காலம் மாறிய பிறகும் ஹீரோக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, நடிகைகளுக்கு முக்கிய துவம் கொடுக்கவில்லை. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது நெட்ஃபிக்ஸ் வந்துவிட்டது, அமேசான் வெப் தொடர்கள் வந்துவிட்டது. வெப்தொடர்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ளது.
ஆனாலும், சினிமாவில் பழைய நிலையே தொடர்கிறது. கமர்ஷியல் படம் இன்றும் அதே அமைப்பைக் கொண்டுள்ளது. ஹீரோ இன்னும் ஹீரோவாக நடிக்கிறார், மேலும் கதாநாயகி பின்னோக்கிப் போய்விட்டார்கள். இது மாற வேண்டும் இந்த மாற்றம் தொழில்துறையிலிருந்து வர வேண்டும்” என கூறியுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…