சினிமாவில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை…நடிகை பூமிகா வேதனை.!!

Bhumika Chawla

ஒரு காலகட்டத்தில்  கலக்கி வந்த நடிகை பூமிகா  கடைசியாக தமிழ் த்ரில்லர் படமான கண்ணை நம்பாதே படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து 2022 இல், அவர் சித்தந்த் குப்தா மற்றும் வேதிகா பின்டோ நடித்த இந்தி திரைப்படமான ஆபரேஷன் ரோமியோ படத்திலும் நடித்திருந்தார்.

bhumika
bhumika [Image source : twitter/@fans45com]

அதைப்போல, தெலுங்கு படங்களான சீதா ராமம் மற்றும் பட்டர்ஃபிளை ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து மீண்டும் பல படங்களில் நடித்து வரும் பூமிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என கூறியுள்ளார்.

bhumika
bhumika [Image source : twitter/@GetNewsd]

இது குறித்து பேசிய அவர் ”  காலம் மாறிய பிறகும் ஹீரோக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.  துரதிர்ஷ்டவசமாக, நடிகைகளுக்கு முக்கிய துவம் கொடுக்கவில்லை. இது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது நெட்ஃபிக்ஸ் வந்துவிட்டது, அமேசான் வெப் தொடர்கள் வந்துவிட்டது. வெப்தொடர்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ளது.

bhumikachawla
bhumikachawla [Image source : twitter/@tamilcinestars]

ஆனாலும், சினிமாவில் பழைய நிலையே தொடர்கிறது. கமர்ஷியல் படம் இன்றும் அதே அமைப்பைக் கொண்டுள்ளது. ஹீரோ இன்னும் ஹீரோவாக நடிக்கிறார், மேலும் கதாநாயகி பின்னோக்கிப் போய்விட்டார்கள். இது மாற வேண்டும் இந்த மாற்றம் தொழில்துறையிலிருந்து வர வேண்டும்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்