நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தங்கலான்”. இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். படத்திற்கான முதல் “Glimpse” வீடியோ கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தில் மாளவிகாவுக்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.
படத்தில் மாளவிகா மோகனன் எதிர்பார்த்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுக்கவில்லை என்பதால் பா. ரஞ்சித் அதிருப்தியில் இருக்கிறாராம். இதனால் மாளவிகா மோகனனுக்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக நெட்டிசன்கள் தகவலை பரப்பி வருகிறார்கள்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…