இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, ஜிவியின் தங்கை பவானி ஸ்ரீ, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தே ஆண்டே தொடங்கப்பட்ட நிலையில், இன்னும் முடவடைந்த பாடு இல்லை. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வருகிறதாம்.
அதில், சூரி மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோருடைய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். அடுத்த மாதம் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு அத்துடன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைகிறதாம். அதன்பின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றும் என தெரிகிறது.
முழுவதுமாக படத்தை நவம்பர்குள் முடித்து படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியீட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு இயக்குனர் வெற்றிமாறன், சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவார் என தெரிகிறது.
வாடிவாசல் படத்தை எப்போது தான் தொடங்குவார் வெற்றிமாறன் என காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் 15 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…