பாலிவுட் ஹீரோவாக ஜெயித்தரா நம்ம விஜய் சேதுபதி.? மிரட்டலான மேரி கிறிஸ்துமஸ்….

Vijay Sethupathi in Merry Christmas Review

பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ் திரையுலகில் 4 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.  தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 ஆகிய நேரடி தமிழ் திரைப்படங்களோடு, விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து தமிழிலும் தயாராகி ரிலீஸாகியுள்ள மேரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் ரிலீசாகி உள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக களம் இறங்கிய திரைப்படம், கத்ரினா கைப் நடித்துள்ள திரைப்படம் , பாலிவுட் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் என பல்வேறு எதிர்பார்ப்புகளோடு இன்று வெளியாகியுள்ளது மேரி கிறிஸ்மஸ்.  இந்த மேரி கிறிதுஸ்மஸ் படம் 2018ல் வெளியான பிரெஞ்சு குறும்படமாக  தி பியானோ டியூனர் (The Piano Tunner) எனும் குறும்படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.

ஹிந்தி தெரியாது போயா… அனல் பறக்கும் டீசர்! அதகளம் பண்ணும் கீர்த்தி சுரேஷ்.!

ஆல்பர்ட் எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், மரியா எனும் கதாபாத்திரத்தில் கத்ரினா கைஃபும்  நடித்துள்ளனர். ஜெயிலிலிருந்து ரிலீசாகி அன்றைய தினம் வீட்டுக்கு வரும் விஜய் சேதுபதி, அன்று கிறிஸ்மஸ் தினம் என்பதால் அருகில் உள்ள இடத்திற்கு இரவு மது விருந்துக்கு செல்கிறார். அங்கு தனது குழந்தையுடன் கத்ரினாவும் வருகிறார்.  இருவரும் பேசிக்கொண்டே, அன்று இரவு ஒன்றாக ஊர் சுற்றுகின்றனர்.

அதன் பின்னர் கத்ரினா கைஃப் அழைப்பின் பெயரில் விஜய் சேதுபதி, கத்ரினா வீட்டிற்கு செல்கிறார். அங்கு கத்ரினா கைப்பின் கணவர் இறந்து இருக்கிறார். அவரை யார் கொலை செய்தது .? விஜய் சேதுபதி யார்.? கத்ரினா வாழ்வின் என்ன நடந்தது என்பதுக்கான விடை விறுவிறுப்பாகவும் அவ்வபோது கதையோடு காமெடி கலந்தும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.

திரில்லர் கதைகளுக்கு பெயர் போன இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இந்த படத்திலும் அதனை கச்சிதமாக செய்து முடித்துள்ளார். தன் குழந்தைக்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறார் கத்ரினா. அதிக வசனம் இல்லாவிட்டாலும் தனது முக பகவனைகளால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் எளிதில் கவர்ந்து விடுகிறார் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

இயக்குனரின் அக்மார்க் சஸ்பென்ஸ் திரில்லர், கதையோடு காமெடி, ப்ரீதம் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தது. மது நீலகண்டனின் ஒளிப்பதிவு மற்றும் பூஜா லதா சுர்தியின் எடிட்டிங் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அந்தாதுண் போன்று விறுவிறுப்பாக இல்லை என்றாலும் மேரி கிறிஸ்துமஸ் ரசிகர்களை எந்த வகையிலும் சோர்வடைய வைக்கவில்லை என்பதே உண்மை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்