அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ள “லவ்வர்” திரைப்படத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் இணைந்து லவர் படத்தையும் தயாரிக்கின்றன. ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய , எடிட்டராக பரத் விக்ரமன் பணி புரிந்துள்ளார்.
இப்படம் இளைஞர்களின் பெரும் எதிர்பார்களுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படத்தின் முழு விமர்சனத்தை பார்க்கலாம்.
லவ்வர் விமர்சனம்
இந்தப் படம் அருண் (மணிகண்டன்) மற்றும் திவ்யா (ஸ்ரீ கௌரி பிரியா) ஆகியோருக்கு இடையேயான காதல்-வெறுப்பு உறவை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. காதல், மோதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என அனைத்தையும் கடந்து அருண் (மணிகண்டன்) தன் காதலில் வெற்றி பெற்றாரா என்பதே லவ்வர் படத்தின் கதையாகும்.
தமிழ் சினிமாவில் ரிலேஷன்ஷிப் கதை கொண்ட திரைப்படங்கள் பல இருந்தாலும், வியாஸ் அதிலிருந்து சற்று வேறு மாதிரியாக ‘லவ்வர்’ படத்தினை வழங்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்கள் கையாளப்படும் விதமும், அவர்களது கம்மீஸ்ட்ரி என அவற்றை பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது.
ஜான்வி கபூருக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்?
படம் முழுக்க அளவுக்கு அதிகமாக புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் காட்சிகள் உள்ளன. இருந்தாலும் 2k கிட்ஸ்களின் மைண்ட்செட்டை படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதி சிறிது நேரம் மெதுவாக செல்கிறது. ஆனால் அதிலும் முதல் பாதி சுவாரஸ்யமான காட்சிகள் நிறைய இருக்கிறது.
மணிகண்டன் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல், மிகச்சிறப்பான நடிப்பை வழங்குகிறார். குறிப்பாக அவர் சத்தமாக இருக்கும் காட்சிகளில் அற்புதமான நடித்துள்ளார். அதற்கு ஏற்றார் போல் படத்தில் நடிகை ஸ்ரீ கௌரி ப்ரியா மற்றொரு வரவேற்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கண்ணா ரவி படத்திற்கு மற்றொரு சிறந்த சேர்க்கை மற்றும் அவருக்கு ஒரு ஸ்டைலான கதாபாத்திரம் உள்ளது. கீதா கைலாசம் அம்மாவாகவும் நன்றாக நடித்திருக்கிறார்.
லால் சலாம் திரைப்படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!
படத்திற்கு ஷான் ரோல்டன் இசை, சிறந்த பாடல்கள் மற்றும் சிறந்த ஸ்கோர் மூலம் படத்தை போர் அடிக்காமல் பார்க்க வைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் என்றே சொல்லாம். மொத்தத்தில் படம் காதலர்களுக்கு விருந்தாக அமையும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…