சென்னை: சன் டிவியில் ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற புதிய காமெடி சமையல் நிகழ்ச்சி, வரும் 19ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், சமையல் திறமைகளை வெளிப்படுத்தும் போட்டியாளர்களின் இறுதி பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதில், டூப் குக்குகளாக விஜய் டிவி மூலம் பிரபலமான பரத், தீனா, மோனிஷா, ஜி.பி.முத்து உள்ளிட்டோரும், போட்டியாளர்களாக நடிகர்கள் சாய் தீனா, ஃபெப்சி விஜயன், சோனியா அகர்வால், சைத்ரா ரெட்டி, சிங்கம் புலி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் நடுவராக வெங்கடேஷ் பட் செயல்படவுள்ளார்.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்று எடுத்துக்கொண்டால், அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்து 5வது சீசன் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், முந்தைய நிகழ்ச்சி போன்று இந்த நிகழ்ச்சிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அது காரணமாக தானா? என்னெவென்று தெரியவில்லை, அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் சமீபத்தில் விலகினார். மேலும் சில கோமாளிகளும் விலகினர, இதனை தெடர்ந்து, அவர்களுக்கு பதிலாக சிலர் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில், குக் வித் கோமாளிக்கு போட்டியாக ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது. இது தொடர்பான ப்ரோமோக்களை சன் டிவி நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…