சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 யில் டைட்டில் யார் வின்னர் தெரியுமா விபரம் இதோ
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் மிகவும் பிரபலமான ஷோ சூப்பர் சிங்கர். இந்த இசை நிகழ்ச்சியின் மூலம் நம் தமிழ் திரையுலகிற்கு பல பாடகர்கள் அறிமுகமாகியுள்ளார்கள்.கடந்த 10 ஆண்டுகளாக ஜூனியர் ,சீனியர் என ஓவ்வொரு ஆண்டும் பலர் கலந்து கொண்டு மிக சிறந்த பாடகர்களாக தமிழ் திரையுலகிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 இறுதி கட்ட போட்டிக்கு சின்மயி,அஹானா ,அனுஷியா,சின்மயி ,ரித்விக் மற்றும் பூவையார் ஆகியோர் தேர்வானார்கள்.
இதையடுத்து நேற்று நடந்த இறுதி கட்ட போட்டியில், முதல் பரிசு 50 லட்சம் மதிப்புள்ள வீட்டை ரித்விக் தட்டி சென்றுள்ளார். இரண்டாம் பரிசை25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை சூர்யாவும் ,மூன்றாம் பரிசான 10 லட்சத்தை பூவையாரும் பெற்றுள்ளார்கள்.