ajith kumar [file image]
நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக ஒரு படத்தில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளருடன் பணிபுரிகிறார் என்றால் அதற்கு அடுத்த படியாக அந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இரண்டு படங்கள் அல்லது 3 படங்களை தொடர்ச்சியாக செய்ய கூடிய வாய்ப்பை கொடுத்துவிடுவார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சிறுத்தை சிவா, எச்.வினோத், ஆகியோரை கூறலாம்.
இணையுமா அஜித் – வெற்றிமாறன் கூட்டணி? விட்டதை பிடிக்க மாஸ்டர் பிளான் போட்ட தயரிப்பாளர்.!
சிறுத்தை சிவா வீரம் படத்தை இயக்கிய பிறகு அவருக்கு வேதாளம், விஸ்வாசம், ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார். அதைப்போல இயக்குனர் எச்.வினோத்திற்கு நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை தொடர்ச்சியாக கொடுத்தார். இந்த மூன்று படங்களையும் தயாரிப்பாளர் போனிகபூர் தான் தயாரிக்கவும் செய்து இருந்தார்.
இப்படி தொடர்ச்சியாக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கும் நடிகர் அஜித் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறாராம். அது என்னவென்றால், இனிமேல் தன்னை வைத்து தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரே ஒரு படம் தான் செய்து கொடுக்க முடிவு எடுத்து இருக்கிறாராம்.
இனிமேல் ஒரு படத்தின் தயாரிப்பாளருடன் பணியாற்றும் போது அடுத்ததாக தொடர்ச்சியாக அவர்களுக்கு படங்களை தயாரிக்கும் வாய்ப்பை கொடுக்கவேண்டாம் என்று அதிரடியான முடிவை எடுத்துள்ளாராம். இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் தயாரிப்பாளருக்கு தொடர்ச்சியாக இப்படி கொடுக்கவேண்டாம் என்று முடிவெடுத்ததைப்போல இயக்குனருக்கு இப்படி வாய்ப்பு கொடுக்கவேண்டாம் என்ற முடிவை எடுக்க சொல்லுங்க என கலாய்த்து வருகிறார்கள்.
மேலும் நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாகஇயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…