“ஹேமா கமிட்டி அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – மன உளைச்சலுக்கு ஆளான அமலாபால்.!
ஹேமா குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார்.
கொச்சி : மலையாள திரையுலகின் நடிகைகளுக்கு நடக்கும் துன்புறுத்தல்கள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டிய ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஹேமா கமிட்டி அறிக்கை தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
இதுவரை நடிகைகள் அளித்த பாலியல் வன்கொடுமை புகார்களின் பேரில் பலரது மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வரிசையில், இயக்குனர் ரஞ்சித் மீதும் இன்று புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகை அமலா பால் மருத்துவமனையொன்றின் திறப்பு விழாவின் போது, செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்பொழுது அவர் பேசுகையில், ” ஹேமா கமிட்டி அறிக்கையில் மிகவும் கவலையளிக்கும் மற்றும் அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் வெளிவந்தன. இதனால், ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக அமலா ஒப்புக்கொண்டார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை அனைத்தும் புறக்கணிக்கப்படாமல் அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்புகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க, சரியான தீர்வாக இருக்க வேண்டும்.
நட்சத்திர அமைப்புகள் உட்பட பெண்களே தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் 50 சதவீதம் பெண்கள் வர வேண்டும். ‘ஹேமா கமிட்டி அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது மற்றும் WCC குழு நன்றாக வேலை செய்தது. நடிகைகள் முன் வைத்த குற்றச்சாட்டில் சட்ட நீதி உறுதி செய்யப்பட வேண்டும்” என அமலா பால் கோரிக்கை விடுத்தார் .