பெண் காவலர்களுக்கு உதவி செய்யுங்கள் – நடிகர் யோகிபாபு

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ராசு மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, மருத்துவர்கள், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தங்களது உயிரை பணையம் வைத்து போராடி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் யோகி பாபு தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘உங்கள் வீட்டின் அருகில் போலீஸ் காவலர்கள் யாரேனும் கண்காணிப்பு பணியில் நின்றிருந்தால் குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள். பெண்காவலர்கள் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள்
அதுவே அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.’ என பதிவிட்டுள்ளார்.
உங்கள் வீட்டின் அருகில் போலீஸ் காவலர்கள் யாரேனும் கண்காணிப்பு பணியில் நின்றிருந்தால் குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள்
பெண்காவலர்கள் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள்
அதுவே அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்????— Yogi Babu (@yogibabu_offl) March 31, 2020
‘