ரீமா சென் : தமிழ் சினிமாவில் மின்னலே, தூள்,செல்லமே, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், ராஜபாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரீமா சென். இவர் நடித்த படங்கள் எல்லாம் தமிழில் கொஞ்ச படம் தான் ஆனால், இவர் நடித்த அந்த படங்களில் இவருடைய நடிப்பு எல்லாம் அனைவரையும் மிரள வைக்கும் வகையில் இருக்கும் என்றேசொல்லலாம். வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் எல்லாம் அந்த மாதிரி ஒரு நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
நன்றாக நடிக்க தெரிந்த இந்த நடிகை திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டே விலகி விட்டார். கடந்த 2012-ஆம் ஆண்டு சிவ கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமணவாழ்கையில் இணைத்தார். தமிழில் அவர் நடித்த கடைசி படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்த படத்திற்கு பிறகு அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகை ரீமா சென் தன்னுடைய முதல் க்ரஷ் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டு இருந்த சமயத்தில் முதல் காதல் ஒரு பையனிடம் ஏற்பட்டது. அந்த பையன் மிகவும் அழகாக இருந்த காரணத்தால் அவரை எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.
இன்னும் வெளிப்படையாகவே சொல்லப்போனால் அப்படி நியாயமாக இருப்பவர்களை பார்த்தாலே எனக்கு பிடிக்காது. என்ன இப்படி இருக்கிறீர்கள் என்று யோசிப்பேன் . ஆனால், அவரை எனக்கு ரொம்பவே பிடித்தது. ஒரு முறை ஒரு விழாவின் போது நான் அவரை பார்த்தேன் சிவப்பு கலர் சட்டை போட்டு இருந்தார். அதில் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு அழகாக இருந்தார்.
அவருடைய முகம் எனக்கு இப்போது நினைவில் இல்லை ஆனால் அவருடைய தோற்றத்தை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது” எனவும் நடிகை ரீமா சென் தெரிவித்துள்ளர். மேலும். சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் ரீமா சென் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியீட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…