அவரு தான் முதல் க்ரஷ்…அதை மட்டும் மறக்க முடியல…ரீமா சென் உளறிய ரகசியம்!

ரீமா சென் : தமிழ் சினிமாவில் மின்னலே, தூள்,செல்லமே, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன், ராஜபாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரீமா சென். இவர் நடித்த படங்கள் எல்லாம் தமிழில் கொஞ்ச படம் தான் ஆனால், இவர் நடித்த அந்த படங்களில் இவருடைய நடிப்பு எல்லாம் அனைவரையும் மிரள வைக்கும் வகையில் இருக்கும் என்றேசொல்லலாம். வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் எல்லாம் அந்த மாதிரி ஒரு நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
நன்றாக நடிக்க தெரிந்த இந்த நடிகை திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டே விலகி விட்டார். கடந்த 2012-ஆம் ஆண்டு சிவ கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமணவாழ்கையில் இணைத்தார். தமிழில் அவர் நடித்த கடைசி படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்த படத்திற்கு பிறகு அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
இன்னும் வெளிப்படையாகவே சொல்லப்போனால் அப்படி நியாயமாக இருப்பவர்களை பார்த்தாலே எனக்கு பிடிக்காது. என்ன இப்படி இருக்கிறீர்கள் என்று யோசிப்பேன் . ஆனால், அவரை எனக்கு ரொம்பவே பிடித்தது. ஒரு முறை ஒரு விழாவின் போது நான் அவரை பார்த்தேன் சிவப்பு கலர் சட்டை போட்டு இருந்தார். அதில் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு அழகாக இருந்தார்.
அவருடைய முகம் எனக்கு இப்போது நினைவில் இல்லை ஆனால் அவருடைய தோற்றத்தை என்னால் எப்போதும் மறக்கவே முடியாது” எனவும் நடிகை ரீமா சென் தெரிவித்துள்ளர். மேலும். சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் ரீமா சென் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியீட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.