ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து படங்களில் நடித்தவர்கள் பலரும் அவரை பற்றி பெருமையாக பேசுவது உண்டு. அந்த வகையில், ரஜினிகாந்துடன் தளபதி படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஷோபனா. இந்த படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி எந்த அளவுக்கு சிறப்பானதாக இருந்தது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இந்த படத்திற்கு பிறகு சிவா என்கிற படத்திலும் ரஜினிகாந்துடன் ஷோபனா நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிக்கும்போது நடந்த சீக்ரெட்டான விஷயம் பற்றியே தகவலை ஷோபனா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுக்கும்போது தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய ஷோபனா ” சிவா படத்தில் மழையில் வரும் படி ஒரு பாடல் இருக்கும் அந்த பாடலில் ரஜினிகாந்தை என்னை தூக்குவார். அந்த பாடலை எடுப்பதற்கு முன்னதாக, மழையில் வைத்து பாடல் எடுக்கப்படப்போவது என்று என்னிடம் தயாரிப்பாளர் சொல்லவில்லை.
எனவே, நான் மாடல் உடையில் வந்து இருந்தேன். அப்போது வெள்ளை நிற சேலை ஒன்று கொடுத்து அணிந்து வரும்படி கூறினார்கள். சேலை அணிவதற்கு முன்பு புடவை அணிந்தால் தான் சரியாக இருக்கும் ஆனால், நான் கையில் எதுவுமே கொண்டு வரவில்லை. திரும்ப போய் எடுத்துவிட்டு வரவேண்டும் என்றால் ரொம்பவே நேரம் ஆகிவிடும். அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குளித்துக்கொண்டு இருந்தேன்.
அப்போது அங்கு பெரிய பிளாஸ்டிக் கவர் ஒன்று இருந்தது. அந்த கவரை பார்த்தவுடன் அதனை எடுத்துக்கொண்டு பாவாடை போல சுற்றிக்கொண்டு சேலையை அணிந்துகொண்டேன். பின் ரஜினிகாந்த் என்னை தூக்குவது போல காட்சி வரும்போது அவர் என்னை தூக்கினார். அப்போது அந்த பிளாஸ்டிக் கவர் சத்தம் கேட்டவுடன் ரஜினிகாந்த் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டார். படப்பிடிப்பு நடந்ததால் அப்போது எதுவும் அவர் என்னிடம் கேட்கவில்லை.
பின் அந்த காட்சி எடுத்துமுடிந்த பிறகு என்னிடம் வந்து என்ன ஆச்சு எதற்கு அப்படி சத்தம் வந்தது என்பது போல கேட்டார். நான் விஷயத்தை சொன்னேன். இதனை வெளியே சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ரஜினிகாந்தும் வெளியே சொல்லவில்லை. இந்த ரகசியம் எனக்கும் ரஜினிக்கும் மட்டும் தான் தெரியும். ரஜினிகாந்த் ஒரு பக்க ஜென்டில்மேன்” எனவும் நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…