என்னை தரக்குறைவாக நடத்தினார் அட்லீ பரபரப்பு புகார் அளித்த துணை நடிகை
இயக்குநர் அட்லீ கோலிவுட் சினிமாவில் தரமான படங்களை இயக்கும் மாஸ் இயக்குநராக வலம் வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் விஜய்யை வைத்து “தளபதி 63” எனும் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படம் என்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா கூறி வருகிறார்.
இயக்குநர் அட்லீ எனது கதையை திருடி விட்டார் எனவும் அவர் சென்னை உரிமையியல் நீதி மன்றத்தில் குறும்பட இயக்குநர் செல்வா வழக்கு தொடர்ந்துள்ளார்.
“தளபதி 63” படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை கிருஷ்ணதேவி இயக்குநர் அட்லீ என்னை படப்பிடிப்பின் போது தரக்குறைவாக நடத்தினார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்து தற்போது அட்லீ மீது பல குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது.