“நான் சினிமாவில் இருக்க காரணமே அவர் தான்”…கமல்ஹாசனை புகழ்ந்து தள்ளிய சூர்யா!

கங்குவா படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னையில் நடைபெற்ற நிலையில் மேடையில் கமல்ஹாசனை சூர்யா புகழ்ந்து பேசியுள்ளார்.

சென்னை : நடிகர் சூர்யா பல மேடைகளில் தன்னுடைய நடிப்பிற்கு குரு என்று கமல்ஹாசனைத் தான் கூறுவது உண்டு. அவருக்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறி பார்த்திருக்கிறோம். குறிப்பாக, விக்ரம் படத்தில் கூட ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்காகத் தான் ஒற்றுக்கொண்டேன் என்று கூட அவரே கூறியிருந்தார்.

தொடர்ச்சியாகவே கமல்ஹாசனைப் புகழ்ந்து பேசி வரும் சூர்யா தற்போது நான் இன்று சினிமாவில் இருக்கவே முக்கிய காரணம் கமல்ஹாசன் தான் என வெளிப்படையாகவே தெரிவித்து அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா ” நான் இப்போது சினிமாவில் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என்னுடைய சகலகலா வல்லவன் கமல் சார் தான்.

அவருடைய நடிப்பில் வெளியான ராஜபார்வை படம் அந்த சமயம் வணிகம் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன்பிறகு வணிக ரீதியாக வெற்றி கொடுக்க ஏக் துஜே கேலியே திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் தான் முதல் பான் இந்தியா திரைப்படம். 1981ம் ஆண்டில் அதுதான் முதல் பேன் இந்தியன் சினிமா என்று நினைக்கிறேன்.

2018ம் ஆண்டு நான் நடித்த ‘வாரணம் ஆயிரம்’ படத்தைக் கமல் சாரிடம் போட்டுக் காட்டினேன். அப்போது அவர் பத்து வேடத்தில் ‘தசாவதாரம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் அவருக்கு ஐம்பது வயதைக் கடந்திருக்கும். ஆனாலும், சினிமாவின் மீது கொண்ட தீராக் காதலால் தொடர்ந்து புதுமையாக நடித்துக் கொண்டிருந்தார்.

நம் நாட்டின் பெருமை மிகுந்த நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான். சினிமா துறையில் பயணிப்பது என்பது எளிதான விஷயம் தான். ஆனால், அதற்கெல்லாம் பாதை போட்டுத் தருவது அவ்வளவு எளிதல்ல.அதனை கமல்சார் அருமையாகச் செய்துள்ளார். அவர் தான் நமக்கெல்லாம் பாதை போட்டுத் தந்தவர். எனவே, அவரை போல ஒருவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக, நம்முடன் இருக்க வேண்டும்” எனவும் நெகிழ்ச்சியாக சூர்யா பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்