உலகின் மிக அழகான மனிதர் இவர் தானாம்! அமெரிக்க நிறுவன வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரபல நடிகர்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று உலகின் மிக அழகான மனிதன் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியை நடத்தியுள்ளது. இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில், உலகின் மிக அழகான மனிதனாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஹாலிவுட் நடிகர்களான கிறிஸ் எவான்ஸ், ராபர்ட் பேட்டின்சன், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் உள்ளிட்ட மிகவும் பிரபலமான பிரபபலன்களை பின்னுக்கு தள்ளி இந்த பட்டத்தை வென்றுள்ளார். இதனையடுத்து, ஹிருத்திக் ரோஷனின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். மேலும், பல பிரபலங்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.