விஷாலின் அடுத்த படத்தில் இணையும் முக்கிய பிரபலம் இவர் தானா
விஷால் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர்.இவர் “அயோக்கியா ” படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது,
இந்நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் “இரும்பு திரை” .இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்க இருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்குகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் தற்போது யுவன்சங்கர்ராஜா இசைஅமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் ,நடிகைகள் தேர்வு நடை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.