நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 41-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவரிடம் உங்களுடைய ரோல் மாடல் யார்..? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த சூர்யா ” என்னுடைய ரோல் மாடல் கமல்ஹாசன் சார் தான். அவர் வசூல் ரீதியாக வெற்றிபெறும் படங்களையும் தருவார். பரிசோதனை முயற்சிகளையும் தொடர்வார்.
இதையும் படியுங்களேன்- ரஜினி கதை கேட்க தயாரா…? ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட் இதோ.!
ஒரு படம் தோல்வி அடைந்துவிட்டால் அந்த தோல்வியால் அவர் ஒரு போதும் துவண்டு போகவே மாட்டார். ஒரு படம் தோல்வி அடைந்தாள் அடுத்த படம் மிகவும் பிரம்மாண்டத்துடன் வருவார். அதுவும் ஒரு பாதுகாப்பான ஒரு படமாக இருக்காது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் சூர்யா கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கமலுக்காக சூர்யா சம்பளம் வாங்காமல் நடித்திருந்தார், அதற்காக அன்பு பரிசாக கமல்ஹாசனும் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…