நடிகை குஷ்பூ தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு படங்களை தயாரித்துக்கொண்டும் வருகிறார். இதற்கிடையில், தன்னுடைய சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் தன்னை பற்றிய விவரங்களை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது உருக்கமான பதிவு ஒன்றை குஷ்பூ தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” எனது மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார். கடந்த 4 நாட்களாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று ஒரு சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது. தயவுசெய்து அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.” என பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் அவருக்கு பிராத்தனை செய்து விரைவில் குணமடைவார் கவலை வேண்டாம் என ஆறுதல் கூறி வருகிறார்கள். அதற்கு நன்றி தெரிவித்த குஷ்பூ டிவிட்டரில் ” உங்கள் பிரார்த்தனைகளுக்கு அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் என் சகோதரன் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். அவர் குணமடைய பலர் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், அவர் குணமடைவார் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…