உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்…பிரார்த்தனை செய்யுங்கள்..குஷ்பூ உருக்கம்.!

Default Image

நடிகை குஷ்பூ தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு படங்களை தயாரித்துக்கொண்டும் வருகிறார். இதற்கிடையில், தன்னுடைய சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் தன்னை பற்றிய விவரங்களை தெரிவித்து வருகிறார்.

Kushboo
Kushboo [Image Source Google]

அந்த வகையில், தற்போது உருக்கமான பதிவு ஒன்றை குஷ்பூ  தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” எனது மூத்த சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார். கடந்த 4 நாட்களாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று ஒரு சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது. தயவுசெய்து அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.”  என பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்களும் நெட்டிசன்களும் அவருக்கு பிராத்தனை செய்து விரைவில் குணமடைவார் கவலை வேண்டாம் என ஆறுதல் கூறி வருகிறார்கள். அதற்கு நன்றி தெரிவித்த குஷ்பூ டிவிட்டரில் ” உங்கள் பிரார்த்தனைகளுக்கு அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் என் சகோதரன் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள். அவர் குணமடைய பலர் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், அவர் குணமடைவார் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்