நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிகைகள்,காயத்திரி, மைனா நந்தினி, ஷிவானி நாரயணன் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அட்டகாசமாக இசையமைத்தருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்களாக இருக்கட்டும். பின்னணி இசையாக இருக்கட்டும் அணைத்து இசையிலும் பூந்து விளையாடி விட்டார் என்றே கூறவேண்டும்.
இந்த நிலையில், விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார். அதைபோல் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வகையை சேர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக அளித்திருந்தார்.
இதையும் படியுங்களேன்- அடி தூள்.! அதிரடி வெற்றி.! அசால்ட்டாக 300 கோடி வசூல் செய்த விக்ரம்.!?
இதனையடுத்து, சமீபத்தில் விக்ரம் வெற்றியை தொடர்ந்து கேரளாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்போது ஒருவர் “விக்ரம் பட வெற்றிக்கு கமல்ஹாசன் கார் கொடுத்தார், வாட்ச் கொடுத்தார் உங்களுக்கு என்ன கொடுத்தார் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அசால்ட்டாக பதில் அளித்த அனிருத்” கமல் சார் எனக்கு விக்ரம் படத்தையே கொடுத்தார்” என்று கூறியுள்ளார். அவர் பேசிய இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…
சென்னை : அண்ணாபல்கலை கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது…
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…
சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…