இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தை இயங்குவதாகவும், படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு சில காரணங்களால் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியதாகவும் தகவல் பரவியது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், விக்னேஷ் சிவன் தனது டிவிட்டரில் இருந்த AK62 டேக்கை நீக்கினார். இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் “நான் கூறிய கதை அஜித் சாருக்கு பிடித்துவிட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பாளருக்கு இரண்டாம் பாதி பிடிக்கவில்லை.
பிறகு என்னிடம் படத்தின் கதையில் சில சிறிய சிறிய மாற்றங்கள் செய்ய சொன்னார்கள். அதில் எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை இதன் காரணமாக மட்டும் தான் நான் இந்த திரைப்படத்தில் இருந்து விலகினேன்” என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
இதைப்போல முன்னதாக ஒரு பேட்டியில் ” அஜித் சார் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை.. எனக்கு கிடைச்ச வாய்ப்பு இப்போ மகிழ் திருமேனி மாதிரி ஒருத்தருக்கு கிடைச்சதுல மகிழ்ச்சி.மற்றபடி, ஒரு அஜித் சாருடைய ரசிகரா இந்த படத்தை நான் என்ஜாய் செய்து பார்ப்பேன்” என கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…