சட்டுனு உள்ள வந்து சட்டையை கழட்டிட்டாரு! காஜல் அகர்வால் சொன்ன அதிர்ச்சி சம்பவம்!

Published by
பால முருகன்

சென்னை : கேரவனில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி நடிகை காஜல் அகர்வால் பேசியுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்த பிறகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். இருப்பினும், ஆரம்ப காலத்தை போல பெரிய அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை என்றே சொல்லலாம். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் நிலையில், பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் காஜல் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் கலந்து  கொண்டபோது தான்  ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது கேரவனில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நிறையவே இருக்கிறது.

அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஒரு முறை ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது நான் கேரவனில் இருந்தேன். அப்போது திடீரென அந்த படத்தில் உதவி இய்குணராக பணியாற்றிய ஒருவர் கேரவணுக்குள் அனுமதி கூட இல்லாமல் நுழைந்தார். நான் அவர் உள்ளே வந்ததை பார்த்ததும் ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டேன்.

பிறகு சட்டையை கழட்டி விட்டு அவருடைய நெஞ்சில் என்னுடைய பெயரை பச்சை குத்தியதை காமித்தார். இருப்பினும், யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே நுழைந்து அவர் சட்டையை கழட்டியது எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. பிறகு அந்த உதவி இயக்குனரிடம் நீங்கள் உங்களுடைய அன்பை வெளிப்படுத்த இப்படி செய்தீர்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன்.

ஆனால், இது போன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடாதீர்கள் என்று அவரை எச்சரித்தேன். அவரும் கேட்டுக்கொண்டார்” எனவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரசிகராக இருந்தாலும் இப்படியா செய்வது என்பது போல விமர்சித்து பேசி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

6 minutes ago

“ஆளுநர் ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்”..திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் தீர்மானம்!

சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…

8 minutes ago

8 இடங்களில் செயின் பறிப்பு : மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது – அண்ணாமலை!

சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…

20 minutes ago

“ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படி?” கலக்கலாக வெளியான மணிகண்டனின் புதுப்பட ட்ரைலர் இதோ…

சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…

1 hour ago

சண்டே ஸ்பெஷல்..! மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்வது எப்படி.?

சென்னை :மணப்பட்டி  சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…

1 hour ago

புத்தக காட்சித் திருவிழா : “1,125 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு..” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …

2 hours ago