சட்டுனு உள்ள வந்து சட்டையை கழட்டிட்டாரு! காஜல் அகர்வால் சொன்ன அதிர்ச்சி சம்பவம்!
சென்னை : கேரவனில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி நடிகை காஜல் அகர்வால் பேசியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்த பிறகும் படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். இருப்பினும், ஆரம்ப காலத்தை போல பெரிய அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை என்றே சொல்லலாம். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
படம் வரும் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் நிலையில், பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் காஜல் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் கலந்து கொண்டபோது தான் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது கேரவனில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நிறையவே இருக்கிறது.
அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஒரு முறை ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது நான் கேரவனில் இருந்தேன். அப்போது திடீரென அந்த படத்தில் உதவி இய்குணராக பணியாற்றிய ஒருவர் கேரவணுக்குள் அனுமதி கூட இல்லாமல் நுழைந்தார். நான் அவர் உள்ளே வந்ததை பார்த்ததும் ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டேன்.
பிறகு சட்டையை கழட்டி விட்டு அவருடைய நெஞ்சில் என்னுடைய பெயரை பச்சை குத்தியதை காமித்தார். இருப்பினும், யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே நுழைந்து அவர் சட்டையை கழட்டியது எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. பிறகு அந்த உதவி இயக்குனரிடம் நீங்கள் உங்களுடைய அன்பை வெளிப்படுத்த இப்படி செய்தீர்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
ஆனால், இது போன்ற செயல்களில் இனிமேல் ஈடுபடாதீர்கள் என்று அவரை எச்சரித்தேன். அவரும் கேட்டுக்கொண்டார்” எனவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரசிகராக இருந்தாலும் இப்படியா செய்வது என்பது போல விமர்சித்து பேசி வருகிறார்கள்.