#HBDIlayaraja இசை உலகில் என்றும் ராஜா…நம் ‘இளையராஜா’…குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!!

HappyBirthdayIlaiyaraaja

இசை உலகில் என்றும் ராஜா இளயராஜா என்று கூறலாம். கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் இளையராஜா தான் இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றே இளையராஜாவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் மேலும் சிலர் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” திரையிசைச் சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களைக் கடந்து நிலைத்து மகிழ்வித்துக்கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்