இன்று தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு பல்வேறு துறைகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கடைசியாக, ஜெயிலரில் நடித்த ரஜினிகாந்த், தனது 70வது படத்திலும், அடுத்ததாக லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடிக்கிறார்.
தற்போது, தனது 70வது படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ரஜினியை காண இனிய காலை ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது, கையில் ரஜினியின் போஸ்டருடன் பாபா முத்திரையை காட்டி, ரஜினி வாழ்க என கோஷம் எழுப்பினர்.
அதில் ஒரு ரசிகர், “என் ஏசுவே.. என் அல்லாவே.. என் சிவனே, எல்லா மதத்தின் தெய்வமே. வாழ்க சிவாஜி ராவ்” என வித்தியாசமாக கோஷமிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
HBD Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தென்னிந்திய பிரபலங்கள் வாழ்த்து.!
நடிகர் ரஜினிகாந்த் இன்று ஊரில் இல்லை என்பதால், அவரது பிறந்தநாள் அன்று அவரைக் காண வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. கடந்த வருடம் இதே போல் அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரைக் காண வந்த ரசிகர்களுக்கு ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் அவர் ஊரில் இல்லை என்றும், படப்பிப்புக்காக வெளி ஊர் சென்றுள்ளார் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நடிக்கும் 170வது படத்திற்கு ‘வேட்டையன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பிறந்தநாளையொட்டி படத்தின் தலைப்பு டீசர் வெளியாகியுள்ளது. ஜெய்பீம் படத்திற்கு பிறகு த.செ.ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…
கர்நாடகா: சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…
சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…
சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…
கோலம் போடுவதில் மறைத்திருக்கும் ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை :நம்முடைய தமிழர்களின் பண்பாடு ஏதேனும் ஒரு…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர்…