ரசிகர்களால் அன்புடன் இன்னும் உலக அழகி என்று அழைக்கப்படும் ஐஸ்வர்யா ராய் பல ஆண்டுகளை கடந்து இன்னும் சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். கடைசியாக இவருடைய நடிப்பில் தமிழில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நந்தினி காதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தற்போது சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், தனது மகள் ஆராத்யாவுடன் வெளி நாட்டுக்கு சென்றுள்ளார். அவர் விமான நிலையத்தில் இருந்து பாரிஸ்க்கு செல்லும்போது ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அவரை சூழ்ந்தனர்.
அப்போது ஊடகங்கள் மேடம் போட்டோ என கேட்க ஐஸ்வர்யா ராயும் தனது மகள் ஆராத்யாவுடன் போஸ் கொடுத்தார். அப்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் மகள் அவரை போலவே அழகாக இருக்கிறார்.
சிறிய வயதில் ஆராத்யாவை பார்த்த பலரும் இப்போது பார்த்துள்ளதால் பலரும் இது ஐஸ்வர்யா ராயின் மகளா? நன்றாக வளர்ந்துவிட்டாரே என கூறிவருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆராத்யா பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு முத்தம் கொடுத்தபடி, ஐஸ்வர்யா ராய் சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
அந்த புகைப்படத்தில் கூட ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா சிறிய பெண் போல தான் இருந்தார். ஆனால் , தற்போது வைரலாகி வரும் புகைப்படத்தை பார்க்கையில் ஆளே மாறி பெரிய பெண் போல் இருக்கிறார்.மேலும், நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007-ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…