Ghilli vs dheena [file image]
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.
சமீபகாலமாக திரைப்படங்கள் எல்லாம் ரீ-ரிலீஸ் ஆவது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், நேற்று மே 1-ஆம் தேதி நடிகர் அஜித்குமார் பிறந்த நாளை முன்னிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவருடைய நடிப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் ஆன தீனா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
இந்த திரைப்படத்திற்கு முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் ஆன கில்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ரீ -ரிலீஸ் செய்யப்பட்டது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரீ-ரிலீசான இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள் என்றே சொல்லவேண்டும். இன்னுமே சில திரையரங்குகளில் படம் ஓடி கொண்டு இருக்கிறது.
பல ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீசான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 8 கோடி வசூல் செய்து தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட திரைப்படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. எனவே, அஜித்தின் தீனா திரைப்படம் அதனை தொடர்ந்து வெளியான நிலையில், முதல் நாளில் அந்த வசூலை முறியடிக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு மத்தியில் இருந்தது.
இந்நிலையில், நேற்று திரையரங்குகளில் ரீ-ரிலீசான தீனா திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 2.50 கோடி தான் வசூல் செய்துள்ளதாம். கில்லி படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 9 கோடி கிட்ட வசூல் செய்து இருந்தாலும் தமிழகத்தில் முதல் நாளில் 4.75 கோடி வசூல் செய்து இருந்ததாம். இதன் மூலம் கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் வசூலை தீனா படத்தால் முறியடியக்க முடியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…