சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதா?

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தி, நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்பாம் சூரரை போற்று. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில், ,கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து, அதே தேதியில், தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதால், சூரரை போற்று திரைப்படத்தை மே-1-ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.