எம்மாடியோ! இத்தனை ஹிட் படங்களை சூர்யா தவறவிட்டு இருக்கிறாரா? லிஸ்ட் பயங்கரமா இருக்கே!

Suriya : நடிகர் சூர்யா நடிக்க தவறவிட்டு ஹிட் ஆன படங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும் கூட சில ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டு இருக்கிறார். அப்படி தவறவிட்ட படங்களின் பட்டியலை பற்றி நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இத்தனை ஹிட் படங்களை சூர்யா தவற விட்டிருக்கிறாரா என்ற ஆச்சரியத்துடன் உங்கள் மனதிற்குள்ளே கேள்வி எழும்பும்? அந்த வகையில் கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘மின்னலே’. இந்த திரைப்படத்தில் முதன்முதலாக சூர்யா தான் நடிக்க இருந்தாராம்.
ஆனால் அந்த சமயம் வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் அவரால் போய்விட்டதாம். அதன் பிறகு தான் அந்த வாய்ப்பு மாதவனுக்கு கிடைத்ததாம். அடுத்ததாக, ‘பையா’ இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் லிங்குசாமி முதன்முதலாக சூர்யாவை சந்தித்துதான் கூறினாராம்.
ஆனால் சூர்யா தனக்கு இந்த கதாபாத்திரம் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை என்று கூறி நிகாரித்துவிட்டாராம். அதன் பிறகு சூர்யாவின் தம்பி கார்த்தி இடம் இந்த கதையை சொல்லி லிங்குசாமி படமாக இயக்கினாராம். அடுத்ததாக, ‘மாவீரன்’ இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், காஜல் அகர்வால், நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் முதன் முதலாக ராம்சரனுக்கு பதிலாக சூர்யா தான் நடிக்க இருந்தாராம்.
அந்த சமயம் தேதி பிரச்சனை மற்றும் கதை மீது பெரிய அளவில் ஈர்ப்பு வரவில்லை என்பதால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை சூர்யா நிகாரித்து விட்டாராம். அடுத்ததாக விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான,’துப்பாக்கி’ இந்த திரைப்படத்தில் முதன் முதலாக சூர்யா தான் நடிக்க இருந்தாராம். ஆனால் வேறு படத்தில் பிசியாக இருந்த காரணத்தினால் தாமதமாக இந்த படத்தை செய்யலாம் என்பது போல கூறிவிட்டாராம்.
உடனடியாக படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் விஜயிடம் கதையை சொல்லி விஜய்க்கு இந்த கதை மிகவும் பிடித்து போக படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். அதேபோல எச்,வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் ‘ திரைப்படத்திலும் சூர்யா தான் நடிக்க இருந்தாராம். ஆனால் சூர்யா வேறு படத்தில் நடித்துக் கொண்டிருந்த காரணத்தினால் தேதி பிரச்சனை காரணமாக இந்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
அதேபோல ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ராம்சரண் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா தானாம். அதைப்போலவே தேதி பிரச்சனை காரணமாக இந்த திரைப்படத்திலும் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அடுத்ததாக நடிகர் பிரித்திவிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான அடுஜீவிதம் படத்தின் கதையையும் இயக்குனர் முதலில் சூர்யாவிடம் தான் கூறினாராம். ஆனால் சூர்யா அடுத்தடுத்ததாக பல படங்களில் நடிக்க கமிட்டாகி இருந்த காரணத்தினால் இந்த படத்திலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு போய்விட்டதாம்.
அதைப்போல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. இந்த படத்திலும் சூர்யா தான் நடிக்கவிருந்த நிலையில், படத்திற்காக பல நாட்கள் கால்ஷீட் கொடுத்து ரெடியாகவேண்டி இருந்த காரணத்தால் படத்தில் நடிக்கும் வாய்ப்பை சூர்யா மறுத்துவிட்டாராம். இப்படியான ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை சூர்யா இழந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025