தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இசையமைப்பாளராக கலக்கி வந்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் இப்போது ஆரம்ப காலத்தை போல பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே இவர் ஆரம்ப காலத்தில் இசையமைத்து கொண்டிருந்த போது இடையில் சில காலங்கள் சினிமாவை விட்டு காணாமல் போனது தான்.
இதனால் இவருக்கு அப்படியே பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ஹீரோவாக நடித்த தி லெஜண்ட் படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திலும் அவர் இசையமைத்தார். அந்த படத்தில் இசையமைத்த பாடல்கள் சுமாரான வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி வரும் பிரதர் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதற்கிடையில் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு விஷயம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், தற்போது சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் ஓடி கொண்டு இருக்கிறது.
விஜயகாந்த் உடல்நிலை நினைத்து உயிர்விட்ட வேலுமணி…உதவிய பிரேமலதா விஜயகாந்த்.!
அந்த வெள்ளத்தின் போது ஹாரிஸ் ஜெயராஜ் வாங்கி வைத்திருந்த மிகவும் விலை உயர்ந்த லம்போர்கினி வெளிநாட்டு கார் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாம். இதனால் சற்று வேதனையில் இருக்கிறாராம். மிக விலை உயர்ந்த லம்போர்கினி கார் என்பதால் அதனை இங்கு சரி செய்ய முடியாதாம். சரி செய்ய வெளிநாட்டு உதவிதான் வேண்டுமாம்.
ஏற்கனவே, பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு தற்போது காரும் வெள்ளத்தில் சேதம் அடைந்துள்ளதால் மிகுந்த வேதனையில் இருக்கிறாராம். மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 2012-ஆம் ஆண்டு தான் லம்போர்கினி காரை வாங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…