மேடையில் இறங்கி குத்திய ஹாரிஸ் ஜெயராஜ்.! வைரலாகும் வீடியோ…

Harris Jayaraj

இசைக் கச்சேரியில் தங்க மாறி ஊதாரி பாடலுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆடிய வேற மாறி நடனம் ஆடி அசத்தியுள்ளார். இசையமைப்பாளர்களான ஏ.ஆர் ரகுமான், அனிருத், சந்தோஷ் நாராயணன், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளியிட்டோர் பல இடங்களில் தனது இசை கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

எப்போதும், இவரகள் நடத்தும் நிகழ்ச்சியில் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு Vibe செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 3ம் தேதி) இசை மின்னல் என்று அழைக்கப்படும் ஹாரிஸ் ஜெயராஜ் சார்பில் சென்னையில் இசை கச்சேரி மிகவும் பிரமாண்டமாக நாடடைபெற்று முடிந்தது.

ஆம், சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்ற ஹாரிஸ் ஜெயராஜ்-ஜின் ‘ராக் ஆன் ஹாரிஸ் 2. 0’ என்ற இசை கச்சேரியை சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் நடத்தியது. இந்த இசை நிகழ்ச்சியை காண பல ரசிகர்கள், ரசிகைகள் வருகை தந்திருந்தார்கள்.

இறுதிப் பாடலானது ஒரு இசை விருந்தாக இருந்தது. தங்க மாறி ஊதாரி பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் வேஷ்டி சட்டையில் சும்மா லோக்கலாக இறங்கி குத்திய நடனத்தின் வீடியோ தற்பொழுது இணையத்தி கலக்கி வருகிறது. அந்த வீடியோவில், ஹாரிஸ் ஜெயராஜ்-ஜின் சக பாடகர்கள் பாட, ஹாரிஸ் ஜெயராஜ் ஆடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்